அலரி மாளிகைக்கு ஓடிப்போன காவல்துறை அதிகாரிகள்?


பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இலங்கை பொலிஸ் உயர் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை அலரி மாளிகைக்கு விஜயம் செய்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடன், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ரவி வித்தியாலங்கார மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர், குறித்த பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு இரவோடிரவாக மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் விதத்தில் செயல்பட தயார் என இதன்போது அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படலாம் எனத் தகவலால் வெளியாகியுள்ள இந்த நிலைமையில். குறித்த பொலிஸ் அதிகாரிகள் குழு ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

No comments