நேபாளத்தை சேர்ந்த 3 வயதுச் சிறுமி அதிதி கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளார். பாட்டு பாடுவதில் திறமையான இச்சிறுமியின், பாட்டுக்கள் அடங்கிய இசை ஆல்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த இசை அல்பம் வெளியீட்டு விழாவில் அச்சிறுமி கலந்துகொண்டு பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.உலகிலேயே மிக குறைந்த வயதில் இசை அல்பம் வெளியிட்ட முதல் சிறுமி என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இப்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அல்பத்தில் ஒன்பது பாடல்கள் அடங்கியுள்ளன. அதிலொன்று நேபாளிய தேசிய கீதமாகும். அதிதியின் தந்தை ஒரு இசையமைப்பாளர், தனது மகள் ஆறு மாதங்களிலேயே பாடல்களை கிரகித்து அதனை மீள உச்சரிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றார்.