About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 28, 2010 / பகுதி: உலக வலம் / யாதவன்

பாக் விமான விபத்தில் 152 பேர் பலி -45 சடலங்கள் மீட்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அதிலிருந்த 152 பேரும் பலியாகியுள்ளனர். கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் விமானத்தில் 146 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

இஸ்லாமாபாத்துக்கு வடக்கே இருக்கும் ஒரு மலைப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.

ஏர் புளூ எனும் தனியார் நிறுவன விமானமே மரகலா மலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. கராச்சியில் உள்ளூர் நேரப்படி காலை 07.50 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் இஸ்லாமாபாதில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் நொறுங்கி விழுந்துள்ளது.

மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நொறுங்கி விழுந்து எரிந்து போன இந்த ஏ-321 ரக விமானத்திலிருந்து உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயம் அந்த மலைப் பகுதியில் அடர்ந்த மூடுபனிப் படலம் நிலவியுள்ளது.

விமானத்தின் பறக்கும் குறிப்புகள் மற்றும் ஒலி சமிஞ்கைகள் அடங்கிய கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதல் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏதாவது ஆதாரங்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.

நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள் அந்த மலைப் பகுதியில் இருக்கும் மரங்களில் சிக்கி தொங்கிக் கொண்டிருப்பதை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......