About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 26, 2010 / பகுதி: உலக வலம் / யாதவன்

அமெரிக்க - தென்கொரியப் படைகள் 20 கப்பல்கள் 200 போர்விமானங்களுடன் கூட்டுப்பயிற்சி.

அமெரிக்க-தென் கொரியப் படைகள் வடகொரியாவின் தாக்குதல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது நேற்று ஜப்பானியக் கடலில் பயிற்சியைத் தொடங்கின. இந்த மாபெரும் போர்ப் பயிற்சியில் 20 போர்க்கப்பல்கள், 200 விமானங்கள், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த 8,000 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் தென் கொரியாவின் போர்க்கப்பலை வட கொரியா தாக்கி மூழ்கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வட கொரியாவுக்கு இரு நாடுகளும் தெளிவான சமிக்ஙை அனுப்பும் விதமாக இந்தப் போர்ப் பயிற்சி அமையும் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், தென் கொரியப் போர்க்கப்பலை மூழ்கடித்ததாகக் கூறப்படுவதை மறுத்த வட கொரியா இந்தப் பயிற்சி தொடருமானால் தான் அணுவாயுதங்களைக் கொண்டு புனிதப் போர் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

தங்களது இரு நாடுகளின் வலிமையை வெளிப்படுத்தி வட கொரியாவின் அரசியல் மற்றும் ராணுவத் தலைமையை அதிர வைப்பதே இந்தப் போர்ப் பயிற்சியின் நோக்கம் என்று பயிற்சிக் கப்பலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஜான் சட்வொர்த் கூறுகிறார்.
ஆனால் இந்தப் போர்ப் பயிற்சியும் அதன் மூலம் வெளிப்படும் ராணுவ வலிமையும் வட கொரியாவின் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவே பயன்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் எரிச்சலூட்டும் பிரசாரம் புதிதல்ல என்றபோதிலும் இந்தப் போர்ப் பயிற்சி அந்த வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, அனைத்துத் தரப்பினரையும் பொறுமையைக் கடைப் பிடிக்கும்படி சீனா அறிவுறுத்தியுள்ளது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......