Jul 22, 2010
/
பகுதி: விளையாட்டு
/
800 விக்கெட்கள் முத்தையா முரளிதரனின் உலக சாதனை
கொழும்பு: உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் உலகக் கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றிலே முதன்முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெறும் உலக சாதனை படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமையைப் பெற்றார் முரளிதரன். காலேவில் நடைபெற்ற கிரிக்கெட்டில் முரளிதரன் வீழ்த்திய 800 வது விக்கெட் இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவுடையது. தற்போது காலேவில் நடைபெறும் ஆட்டத்தில் விளையாடும் முரளிதரன் மாலையில் ஒய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் முரளிக்கு விடை கொடுக்க காலேவில் சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே முதலியோர் காலேவில் முகாமிட்டுள்ளனர். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சே மைதானத்திற்கு நேரில் வந்து முரளிதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனுக்கு அனைவரும் எழுந்து நின்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முரளிதரனின் சாதனையை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆரவாரத்துடன் ரசித்தனர்.