About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 20, 2010 / பகுதி: இந்திய செய்தி / சேரா

தஞ்சையில் ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக் காட்சி

தஞ்சையில், ஈழப்போர் தொடர்பான, ஓவியர் புகழேந்தியின் ஒவியங்கள் போர் முகங்கள்என்ற தலைப்பில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. வரும் 23.07.2010 அன்று தொடங்கும் இவ்வோவியக் காட்சி, 25.07.2010 வரை நடக்கிறது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இராமநாதன் மன்றத்தில் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்வு, 23.07.2010 வௌ;ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடக்கிறது.

நிகழ்விற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். திரு. விடுதலைவேந்தன் வரவேற்புரையாற்றுகிறார். தஞ்சை அ.இராமமூர்த்தி, திரு. தங்க தமிழ்வேலன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். திரு. க.விடுதலைச்சுடர் நன்றியுரையாற்றுகிறார்.

24.07.2010 அன்று மாலை நடைபெறும், இரண்டாம் நாள் நிகழ்விற்கு தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் அயனாவரம் சி.முருகேசன் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன் வரவேற்புரையாற்றுகிறார். திரு.இரா.ஞானம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மணி.செந்தில் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா சிறப்புரை நிகழ்த்துகிறார். திரு. துரை.மதிவாணன் நன்றியுரையாற்றுகிறார்.

25.07.2010 அன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவிற்கு ம.தி.மு.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. துரை.பாலகிருட்டிணன் தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை வரவேற்புரையாற்றுகிறார். தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் மு.இராமசாமி, நாம் தமிழர் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அ.நல்லதுரை, பெரியார் தொண்டா; திரு. பசு.கவுதமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்துகிறார். ஓவியர் ஓ.புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார். திரு. மா.இராமதாசு நன்றி நவில்கிறார்.

ஓவியக் காட்சி நடைபெறும் மூன்று நாட்களிலும் அரங்கு, காலை 10 மணி முதல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, போர் முகங்கள் ஓவியக் காட்சி அமைப்புக் குழு செய்து வருகின்றது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......