இலந்தை பழம் மற்ற பழங்களோடு ஒப்பிடும்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.
இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது. அவ்வளவு சின்ன பழமாக இருந்தாலும் அதில் அடங்கிய்ளள விட்டமின்கள் ஏராளம்.
கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.
இது உடலுக்கு சூட்டை தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.