About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 6, 2010 / பகுதி: அறிக்கை / செம்பிறை

மேஐர் ஜெனரல் ஐகத் டயஸை நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்

கடந்த வருடங்களில் மிகக் கூடுதலான மனித உரிமை மீறல்களும் மனிதப் படுகொலைகளும் நடந்த நாடாக சிறிலங்கா இடம்பெறுகிறது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கொடூரமான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட அரசு சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் காலம் காலமாக நிலவும் போர் விதிமுறைகளையும் மரபுகளையும் மீறியுள்ளது.

மனித நேயச் சட்டம் போராளிகளையும் பொதுமக்களையும் வேறுப்படுத்திப் பார்க்கும் படியும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குவதைத் தவிர்க்கும் படியும் வலியுறுத்துகிறது இந்தக் கோட்பாட்டை மீறிய சிங்கள அரசு தமிழ் மக்களைத் திட்டமிட்டு இனப் படுகொலை செய்துள்ளது இந்தப் போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளப்பட்டார்கள்

ஒரு போர் குற்றவாளி இராசதந்திர அதிகாரியாக அவதாரம் எடுப்பதும் அதை ஜேர்மன் அரசு அங்கிகரிப்பதும் உலக ஒழுங்கிற்கு முரணான நிகழ்ச்சியாகும் பேர்சனா நொன் கிராட்டா அதாவது இவர் எமக்கு ஏற்புடையவர் அல்ல என்று நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் நடைபெறவில்லை.

மேஐர் ஜெனரல் ஐகத் டயஸ் நியமனத்தை தொடர்ந்தே மனித நேய பணியாளர்கள் கைதும், தமிழ் மக்களை அடக்கும் சதித் திட்டங்களும் ஜெர்மனியிலும் சுவிஸ்லாந்திலும் நடைபெற்று வருவதோடு ஏனைய சில நாடுகளிலும் இரகசிய சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

ஜெர்மனியில் மட்டும் அல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மேஐர் ஜெனரல் ஐகத் டயஸ் நியமனத்தால் தமிழ் மக்களின் சனநாயக குரல்களுக்கு பேராபத்தாக அமைந்துள்ளது. இதை ஐரோப்பிய தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் உலக நாடுகள் போர் மரபுகளை மீறி வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்களை கண்முடித்தனமாக படுகொலை புரிந்த போர் குற்றவாளியான மேஐர் ஜெனரல் ஐகத் டயஸ்சை நீதிமன்றத்தில் நிறுத்த உலக நாடுகள் அனுசரனை வழங்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஈழத் தமிழினம் நியாயம் வேண்டி நிற்கிறது. உயிர், உடலுறுப்பு, வாழ்விடம், நிம்மதி என்பனவற்றை இழந்து சொல்லொணாத் துயரம் கொண்ட ஈழத் தமிழர்களின் நல்வாழ்விற்கும் குரல் எழுப்பி வந்த மனித நேயப் பணியாளர்களை பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.  இவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகிறோம்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே!, சனநாயக வளியில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்பி எமது நியாயப+ர்வமான எதிர்ப்பை தெரிவிப்பதுடன் போர்க் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த ஒவ்வொரு தமிழ் மகனும் உழைக்க வேண்டும்.

- நன்றி -

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


ப. கலையரசன்
செயலாளர்,
ஐரோப்பிய தமிழர் பேரவை


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......