ஒஸ்லோ தீர்மானத் தின் அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும் என்ப தில் நாம் தெளிவாக இருக் கிறோம். இதனை வலி யுறுத்த வேண்டிய தேவை யும், அவசியமும் இன்று எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசி யக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட் பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று நடத்திய ஊட கவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ் வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகை யில் கூறியவை வறுமாறு
இன்று அரசு தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்ட விடயத்தில் கூட அக்கறை காட்டவில்லை.
குறிப்பாக முன் னர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப் பட்ட தீர்வுகளைக்கூட அரசு தரத் தயாராக இல்லை.
யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்தப் பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்காமல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துகின் றது. அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் 10 ஆயிரம் புலிச்சந்தேக நபர்களை விடு தலை செய்ய வேண்டி வரும் என அமைச் சர் கூறுகின்றார். ஆனால் இந்த பொது மன் னிப்பின் அடிப்படையில் இளைஞர்களும், யுவதிகளும் விடுதலைசெய்யப்படவேண் டியவர்கள் என்றார்.
தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சி னைகள் தீர்க்கப்பட வேண்டும். விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் என அனைத்து தொழில்முயற்சிளும் வடக்கு, கிழக்கில் பாதிப் படைந்துள்ளன. இவற்றில் மாற்றத்தை ஏற் படுத்த ஐ.தே.கட்சியினாலேயே முடியும்.
குடாநாட்டிலிருந்து எமது கட்சியின் 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார் களேயானால் தென்பகுதி அரசியலும் நாடாளுமன்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இன்று சுயேச்சைக் குழுக்கள் பலவும் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இவை தமிழ் மக்களின் வாக்குகளை சிதற டிக்கவும் மக்களைக் கூறுபோடவும் அரசி னால் ஏவிவிடப்பட்டவையே.தமிழ் மக்க ளின் பிரசினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.