About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

நலன்புரி முகாம்களில் எத்தனை பேர்? யார் கூறுவது சரி? 99,000 பேர் என்கிறது ஐ.நா.; 70,000 என்கிறது அரசாங்கம்!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 99ஆயிரம்  பேர் இருப்ப தாக ஐக்கிய  நாடுகள் சபையின் மனித நேய விவாகரங்களுக்கான ஒருங்கி ணைப்பு அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


ஆனால் நலன்புரி நிலைங்களில் 70ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியு தீன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுமுன்தினம் பி.பி.ஸிக்கு தகவல் அளிக்கையில் கூறியவை வருமாறு
நலன்புரி நிலையங்களில் 70ஆயி ரம் பேர் உள்ளனர். ஏனையவர்கள் அவர்களின் உறவினர்களின் வீடு களில் தங்கியுள்ளனர்.

2 லட்சம் பேரை நாம் மீள்குடியமர்த்தியுள்ளோம். ஆதலால் இது ஒரு பாரிய பிரச்சனை யல்ல. இன்னும் ஓரிரு மாதங்களில் 100வீதமும் குடியமர்த்திவிடுவோம்.


எமது நோக்கம் மக்களைக் குடிய மர்த்துவதே. நாம் இதனை ஐ.நா. சபைக்குப் பயந்தோ அல்லது மேற் குலக நாடுகளுக்குப் பயந்தோ செய்ய வில்லை. நாம் ஜனவரி 31ஆம் திக திக்கு முன்னர் மீள்குடியமர்த்தி முடிக்க எண்ணியிருந்தாலும் மிதிவெடிகளை அகற்றக் காலதாமதம் ஆனதே எமக்குப் பெரிய சவாலாக இருந்தது. முகாங்களில் உள்ளவர்களது தரவு களை ஐ.நாவும் மீள்குடியேற்ற அமைச் சும் இணைந்தே வெளியிடுகின்றன என்றார்.   

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......