About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

சிறீலங்காவுக்கு யப்பானும் 250 மில்லியன் டொலர் கடனுதவி

சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கென யப்பான் 250 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முனவந்துள்ளதாக சிறீலங்காவின் அமைச்சர் காமினி லக்ஸ்மன் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


கொத்மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர்சக்தி மின்உற்பத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அபிவிருத்திகளுக்காக யப்பான் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. யப்பானின் இந்த உதவிகள் போர் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்கப்படவுள்ளது.


யப்பானின் அனைத்துலக கூட்டுறவு அமைப்பு சிறீலங்காவின் நீர் மின் உற்பத்திக்காக 50 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. 0.2 வீத வட்டிக்கு 40 வருட கடனாக அது வழங்கப்பட்டுள்ளது.


சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகப் பணிகளுக்காக இந்த அமைப்பு மேலும் 54.9 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் மாகாணசபைகளின் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக 43.9 மில்லியன் டொலர்களையும் அது வழங்கியுள்ளது. இந்த நிதியானது 0.65 வட்டி வீதத்திற்கு 40 வருட தவணையில் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிதி உதவிகளுக்கு மேலதிகமாக 101 மில்லியன் டொலர் கடனுதவியை தென்னிலங்கையின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக யப்பான் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......