About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா

நளினி விடுதலை வழக்கில் முடிவு 29ல் தெரியும்

இராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் இருந்துவரும் நளினியின் முன் விடுதலை வழக்கில் வரும் 29ஆம் தேதி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் தன்னை முன் விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பு தர்மராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணக்கு வந்தது.

 
நளினி விடுதலைத் தொடர்பாக சிறைக் கைதிகள் ஆலோசனைக் குழு தமிழக அரசிற்கு அளித்த அறிக்கையை சீலிடப்பட்ட உரையில் வைத்து அரசு வழக்கறிஞர் பி.எஸ். இராமன் நீதிபதிகளிடம் வழங்கினார்.

 

நளின விடுதலை தொடர்பாக ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்
இவ்வழக்கு ஒரு தனி மனிதரின் வாழ்க்கைத் தொடர்பானது, ஆகவே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடிவு செய்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை இம்மாதம் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 
அன்று அரசு தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் என்பதால் நளினி விடுதலை தொடர்பான ஒரு முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய

Jul 19, 2010

பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் நீதி வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன.




Guranteed Pass