About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 12, 2010 / பகுதி: செய்தி /

நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம்

யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:


நைனாதீவுப்பகுதியில் கி.மு 10 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும் பேராசிரியர் பொ. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.


ராஜ ராஜ சோழன் மிகவும் பலம் மிக்க அரசனாக 985 தொடக்கம் 1014 காலப்பகுதியில் தஞ்சாவூர் மற்றும் சோழமண்டலம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்திருந்தார்.


நைனாதீவில் கண்டறியப்பட்ட ஆலயத்தில் சுவர்களும், அத்திவாரமும், சிற்பங்களும் காணப்படுவதாகவும், சோழர் காலத்து நாணயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழ்குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இதுவரை பிரித்தானியா மற்றும் டச்சு ஆட்சியாளர்களின் தடயப்பொருட்களே கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் சோழர் காலத்து தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.


மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த ஆலயப்பகுதி முழுமையாக மீட்கப்படும் எனவும், தீவுப்பகுதி மக்கள் இவ்வாறான ஆலயங்களை நிர்மாணிப்பதில்லை எனவும் புஸ்பரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.


சிறீலங்காவில் தமிழ் மக்கள் தொல்பொருள் ஆராட்சிகளில் ஈடுபடுவதை சிறீலங்கா அரசு அனுமதிப்பதில்லை. தொல்பொருள் ஆராட்சியில் சிங்கள மக்களின் அதிகாரங்களே அதிகம் உள்ளன. வடக்கு – கிழக்கில் தொல்பொருள் ஆராட்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசு நிதி உதவிகளையும் வழங்குவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass