About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 12, 2010 / பகுதி: சிறப்புச் செய்தி /

பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறை

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமீதான இன அழிப்புப் போரினை அடுத்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. மிக நீண்ட கால தொன்மை வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக வற்றாப்பளை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது.

 

ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டுவரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்த வரும் திங்கட் கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவரும். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சிகூட அம்மனின் புதுமையால் தோல்வியடைந்ததாக ஆலயவரலாறு குறிப்பிடுகின்றது.



ஓயாத அலைகள் -01 படை நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பாகக் கூட முல்லைத்தீவிற்கு மிக சமீபமாக உள்ள இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.



ஆனாலும் கடந்த ஆண்டு அந்த ஆலயத்தில் பொங்கல் பெருவிழாவை நிகழ்த்துவதற்கு சிறீலங்காப் படையினர் அனுதிக்கவில்லை. ஆலயத்தின் தொன்மை வரலாற்றில் கடந்த ஆண்டு மட்டுமே இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கான அனுமதியினை சிறீலங்காப் படையினர் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.



இந் நிலையில் அண்மையில் அப்பகுதியைச் சென்று பார்வையிடுவதற்கு குறிப்பிட்ட ஆலயத்தின் உறுப்பினர்கள் சிலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் தேவைகளுக்கு என வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மரத்தளபாடங்களும், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பழம் பெரும் பொருட்களும் காணாமல் போயுள்ளதாக அவர்கள் ஊர் மக்களிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

இன்னும் சில நாட்களில் வற்றாப்பளை மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் இந்த ஆண்டு சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் வைகாசிப் பொங்கல் நடைபெறுவதற்கான சூழல் எதிர்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass