About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 11, 2010 / பகுதி: சிறப்புச் செய்தி /

பிரான்சு மாநிலசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின் வேட்பளாராக போட்டியிடுகின்றனர்.

தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..       



எதிர் வரும் மார்ச் 14ம் திகதி பிரான்சு நாடு தழுவிய மாநிலதேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் Seine Saint Denis 93 னுநnளை 93 மாநிலத்தில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின் (Europe-ecologie)  வேட்பளாராக போட்டியிடுகின்றனர்.


 



Ile -de -France யின் பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும்  Cécile Duflot (Europe-ecologie) தலைமையில் Seine Saint Denis (93) மாநிலத்தில் போட்டியிடும் Stéphane Gatignon (Maire de Sevran)   (இவர் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடந்து வந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையான உதவிகளை புரிந்து வரும் செவரோன் மாநகர முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது)



உலகமெங்கு முள்ள பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயின்று வரும் தாய்மொழியாம் தமிழ்மொழி இனி பாராளுமன்றத்திலும் அரசியலிலும், ஒலிக்கப்போவது தமிழ்மொழிக்கும், தமிழைப் பேசி, அதை உயிராய் நேசிக்கும் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு தமிழர்கள் இந்த தேர்தலில் நிற்பது எமக்கு இந்நாடு கொடுக்கும் மரியாதை. இவர்கள் மருத்துவக்கல்லூரி மாணவியும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும், சர்வதேசப்பேச்சாளருமான செல்வி.கிருசாந்தி (சாலினி) சக்திதாசன் அவர்களும், Ile Saint Denis மாநகரசபை ஆலேசகராக 2007 தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட செல்வன் முருகநாதபிள்ளை ரவிசங்கர் ஆகிய இருவரும் தேர்தலில் நிற்கின்றனர்



2007ல் உங்கள் வாக்கு தெரிவு 9 தமிழர்களை மாநகரசபை ஆலோசகர்களாக அனுப்பி வைத்தது.

2010 ல் உங்கள் வாக்கு தெரிவு 2 தமிழர்களை மாநிலத்திற்கு  அரசியல் ஆலோசகர்களாக அனுப்பி வைக்க முடியும்.





அன்பானவர்களே!

தமிழ்வாழவும், அதைப்பேசும் இனம்வாழவும் நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல, எல்லாமே ஓர் உயரிய நோக்கத்தை அடையவே! அந்த தேவைகளையும், ஆசைகளையும், அபிலாசைகளையும், நிறைவேற்றவும், அடையவும், இன்று பிரெஞ்சு அரசியலில் முன்னிலையிலும், மக்கள் மத்தியிலும், உயிர்களுக்கும், மனிதவுரிமைகளுக்கும் எதிர்காலத்தில் பெரும் கேடுவிளைவிக்கும் காரணிகளுக்கெதிராக பசுமைப்புரட்சி செய்து வரும் பட்சைக்கட்சியினரோடு நாமும் இணைந்து எம்மையும், எமது மக்களையும், எமது மண்ணையும் வாழவைப்போம், வாக்களிப்போம்.



இவர்களுக்கு 93ம் பிரதேசம் வாழும் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற அனைத்து தமிழ்மக்களும் வாக்களிப்பதுடன், எமது பிரெஞ்சு மற்றும் இதர நாட்டு நண்பர்களுக்கு கூறி இவர்களுக்கு வாக்களிக்கச்செய்வோம். 



தேன்மதுரத்தழிழோசை உலகமெல்லாம் பரவச்செய்தருளல் வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாக பிரான்சு வாழ் தமிழர் நாம் வாக்களிப்போம். தமிழன் என்ற பெருமையை பெற்றுக்கொள்வோம். எமது துன்பத்தை அரசியல் வழியில் எடுச்செல்ல இதனை பயன்படுத்துவோம் வெற்றியளிகச்செய்வோம்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய

Jul 19, 2010

பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் நீதி வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன.




Guranteed Pass