About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 10, 2010 / பகுதி: செய்தி /

சிறீலங்காவில் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும்படி உலகத் தமிழ்ப்பெண்கள் பேரவை கோரிக்கை

சிறீலங்காவில் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தக் கோரி, சனிக்கிழமை மார்ச் 06, 2010அன்று இலண்டனில் ஊர்வலத்தில் சென்ற ஆயிரக்கணக்கான பெண்களோடு உலகத் தமிழ்ப் பெண்கள்பேரவையும் (ஐ.இ.) கலந்துகொண்டது.


பல்வேறு வயதினரும் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவருமாகஆயிரக்கணக்கான பெண்கள் ஹைட் பார்க்கில் ஒன்றகூடிப் பின்னர்ஒக்ஸ்வோட் வீதி ஊடாகவும் பிக்காடிலி வழியாகவும் ஊர்வலமாகச்சென்று ரவல்கா ஸ்கொயரில் ஒருங்கிணைந்தனர்.

ஐக்கியப்பட்டஅக்கூட்டத்திற்கு பல பேச்சாளர் அங்கு எழுச்சியூட்டும் உரையாற்றினர்.

உலகத் தமிழ்ப் பெண்கள் பேரவையின் (ஐ.இ) பிரதிநிதிஇ சிறீலங்காவில்தண்டனை பற்றிய அச்சமேதுமின்றி அரச படைகள் தமிழ்பபெண்களுக்கெதிராக நடத்திவரும் தொடர்சியான வன்முறைகளாலும்பாலியல் வன்முறைகளாலும் அப்பெண்கள்படும் உணர்வதிர்ச்சிப்பாதிப்புக்கள் பற்றி எடுத்துரைத்தார்.



“ஐக்கிய நாடுகள் சபையானது 100க்கு மேற்பட்ட சிறீலங்கா அமைதிப் படையினரை பாலியற் குற்றச்சாட்டிலும் பெண்களைத் தவறாக நடத்திய குற்றச்சாட்டிலும் ஹெயிற்றியிலிருந்து வெளியேற்றியுள்ளதெனில் அந்த இராணுவத்தின் கைகளில் தமிழ்ப் பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்”; என அவர்கூறினார்.



கொங்கோ, உகண்டா, இரான், அப்கானிஸ்தான ஆசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர் மேடையிலிருந்து ஒற்றுமைக்கும் பெண்களுக்கெதிரான உலகளாவிய வன்முறைக்கெதிராகவும் குரலெழுப்பினர்.



பெண்ணுரிமைக்காகச் செயலாற்றுவோர் மற்றும் பெண்களது தன்னார்வ அமைப்புகள் சமூக அமைப்புகள்முதலியவற்றின் பிரதிநிதிகளின் ஐக்கிய சங்கமாகிய மிலியன் வூமின் றைஸ் (Million Women rise) என்ற அமைப்பால் பெண்களின் செயல் முனைப்புஇ துணிவுஇ உலகளாவிய ஆண் வன்முறைக்கு எதிரான அயராப்போராட்டம் முதலியவற்றைப் போற்றிக் கொண்டாடும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஊர்வலம்அனைத்துலகப் பெண்கள் தினத்துடன் ஒருமித்து நடைபெற்றது.


சிறீலங்காவின் தேயிலையை வாங்காது விலக்கும்படியும் அபபடியான பொருள்களை வாங்கும்செயற்பாடானது சிறீலங்காவில் அரச அனுசரணையுடன் நடைபெற்றுவரும் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எவ்வளவிற்கு நிதி வழங்கும் என்பதையும் எண்ணிப் பார்க்கும்படியும் வருகைதந்திருந்தோரைப் பேரவை வேண்டிக்கொண்டது.

 


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass