நளினி அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணைக்கு எடுத்த நீதிபதி தமிழக அரசிடம் இவர் தொடர்பான அறிக்கையை நாளையே தாக்கல் செய்யவேண்டும் எனப்பணித்துள்ளார்.

இவ்வழக்கில் தமிழக அரசுசார்பில் வேலூர் ஆட்சியாளர் தலைமையிலான குழு அறிக்கை தற்போதுதான் கிடைத்தது எனவும் மேலும் இருவாரகால அவகாசம் வேண்டும் எனவும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டபோதும் நீதிபதி அவர்கள் இதனை நிராகரித்ததோடு நாளையே அவ் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவரது விடுதலை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியாளர் இராNஐந்திரன் அவர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்யதது. அவ் அறிக்கை இன்னமும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.