
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், ஒரு அடி உயரம் உடைய மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார்.
கடந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது.
இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து செல்கின்றனர்.