விளையாட்டு பத்திரிக்கை ஒன்று நாட்டில் விளையாட்டு துறையில் செல்வாக்கு பெற்ற 50 பேரை தேர்வு செய்து விருது வழங்கியது.
பரிசைப் பெற்றுக் கொண்ட டெண்டுல்கர் விழாவில் பேசும்போது கூறும் போது
நான் நீண்ட கனவுகளோடு கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனது முழு இதய உணர்வோடு நாட்டுக்காக தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். அணியில் சிறப்பு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறினார்.
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்காக எனக்கு ஏராளமான வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. இன்னும் கூட வாழ்த்துக்கள் வந்து குவிந்தபடி இருக்கிறது. இது எனக்கு உணர்ச்சிபூர்வமான மகிழ்ச்சியைத் தருகிறது எனத் தெரிவித்துள்ளார்.