கடந்த மாதம் சிலி நாட்டில் மேற்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.

பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர் டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல் கலைக்கழகங்கள், பல நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆய்வுகள் மேற் கொண்டனர்.
இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.