Mar 10, 2010
/
பகுதி: செய்தி
/
மிலிபாண்ட் அவர்கள் உலகத்தமிழர் பேரவையின் மாநாட்டிற்கு சென்றதற்கு பிரித்தானியா விளக்கம்
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் மிலிபாண்ட் அவர்கள் பங்கு பற்றி உரையாற்றியதை அடுத்து சிறீலங்கா அரசு தனது கடும் சீற்றத்தையும் விசனத்தையும் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. இதனையடுத்து சிறீலங்காவிற்கு விஐயம் மேற்கொண்ட பிரித்தானிய அலுவலர்கள் இது தொடர்பில் சிறீலங்கா அரசிற்கு தமது விளக்கத்தை சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் போகல்லாகம அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள் சமாதான வழிகளில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அதன் மூலமே அவர்கள் தீர்வு திட்டத்தை எய்தவிரும்புவதாகவும் அவர்களை சமாதான வழியில் ஈட்டமுயலும் செயலினை ஊக்கப்படுத்துவெ மிலிபாண்ட் அவர்கள் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
சேர் பீற்றர் றிக்கட்ற்ஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள தொண்டுநிறுவனங்களை சுதந்திரமாக அனுமதிக்கவேண்டும் எனவும் இடம்பெயர்ந்த மக்களை பூரணமாக நடமாட்டத்திற்கு அம்மக்களை மீள குடியமர்த்துவதற்கு பிரித்தானியா ஆதரவு வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.