தமிழ் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கான தீர்வாக 13ம் திருத்த்தை கோர இருப்பதாக தெரிவித்துள்ளது. இக்கட்சியின் சார்பாக அதனது பேச்சாளர் தெரிவிக்கையில் தாம் ஒஸ்லோவில் இடம்பெற்ற தீர்வு திட்டத்தை நிராகரிப்பதாகவும் 13ம் திருத்த்தினை கோரிநிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியா தமது தீர்வு திட்டத்திற்கு ஆதரவு நல்குவதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவடைந்தவுடன் இது தொடர்பில் அரசுடன் பேச்சு நடாத்தவுள்ளதாகவும் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபாமா ராவ் அவர்கள் சிறீலங்கா விஐயம் செய்தபோது கிழக்குமாகாண முதலமைச்சரும் முன்னாள் ஆயுததாரியுமான பிள்ளையான் அவர்கள் அவர்களை சந்தித்து இது தொடர்பில் பேசியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.