சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இடம்பெற்றுவரும் வன்முறைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி கட்சிக்குள் நடந்த மோதலில் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எம்பிலிப்பிட்டியா பகுதியில் உள்ள கன்டுருகசார பிரதேசத்தில் கடந்த திங்கட்சிழமை (8) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர்கள் பயணம் செய்த வான் ஒன்றின் மீது அதே கட்சியை சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தாக்குலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபறறிய பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் எம்பிலிப்பிட்டியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனமும் கடும் சேதமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.