About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 10, 2010 / பகுதி: சிறப்புச் செய்தி /

கொன்சவேட்டிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானது

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ் மக்கள் தொடர்பில் அந்த கட்சியின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமாகவே நோக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:


கடந்த மாதம் 24 ஆம் நாள் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் கொன்சேவேட்டிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கலந்துகொண்டு உரையாற்றியது சிறீலங்காவில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பில் அந்த கட்சியில் ஏற்பட்ட கொள்கை மாற்றமாக கருதப்படுகின்றது.


ஈழத்தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட நிகழ்வு ஒன்றில் கொன்சவேட்டிவ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டது இதுவே முதல் தடவை என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


சிறீலங்கா தொடர்பில் கொன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகார கொள்கைகளை வடிவமைப்பதில் புலம்பெயர் தமிழ் சமூகம் எதிர்காலத்தில் காத்திரமான பங்குகளை வழங்க முடியும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


உலகத் தமிழர் பேரவையின் நிகழ்வுக்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவரும், அதன் நிழல் வெளிவிவகார அமைச்சரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதும் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகின்றது.


இதனிடையே பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொன்சேவேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால் சிறீலங்கா தொடர்பான வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிப்பதில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கிக் கொள்ளப்படும் என ஹெக் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய

Jul 19, 2010

பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் நீதி வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன.




Guranteed Pass