ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மதக் கலவரத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கலவரம் வெடிப்பதும், பல நூறு பேர் கொல்லப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த வாரம் பிளாட்டு மாநிலத்தில் உள்ள ஜோஸ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடுமையான மத கலவரம் மூண்டது.
இந்த கலவரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர். பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர்.
இதில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதே வெளை கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.