இது தொடர்பாக அரச தொழில் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, எதிர் கட்சிகள் விகாரமகாதேவி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தின.
ஊர்வலம் கட்டுங்கடங்காமல் சென்றதால்இபொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததின் விளைவாக இரத்தினசாரதேரோ என்ற பௌத்த பிக்கு சுடப்பட்டு மரணமடைந்தார். இருப்பினும் அரசாங்கம் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் இது நடைமுறையில் பெரிதாக செயற்படவில்லை.
1968 – 1983
தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தின் வித்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஊன்றிய காலம்.
1965 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி அங்கம் பெற்றதைத் தொடர்ந்து அதன் போராட்ட அரசியல் வீழ்ச்சிப் போக்கை நோக்கிச் சென்றது; இவ் வீழ்ச்சிப் போக்கினால் கட்சியிலிருந்த தேசியவாதக் கட்சிகள், குறிப்பாக இளைஞர்கள், அதிருப்தியடைய ஆரம்பித்தார்கள். 1968ல் முத்துக்குமாரசாமி, சிவகுமாரன், மகா உத்தமன் போன்றோர்கள் ஈழத் தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பின் தோற்றத்துடன் தமிழ் அரசியலில் தமிரசுக் கட்சி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இளைஞர் இயக்கங்கள் என மூன்று வகையான சக்திகள் தொழிற்படத் தொடங்குகின்றன.
1968ல் கித்துள் குடியேற்றத்திட்டம்.
திருமலை மாவட்டத்தில் கித்துள் ஊற்று என்ற இடத்தில் சிறு குளம் ஒன்ற கட்டப்பட்டு அதில் சிங்களக் குடியேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. த.அ.க. பல்லாயிரம் ரூபா செலவில் தமிழரசு வாலிப முன்னணியைச் சேர்நதவர்களை அங்கு அத்துமீறி குடியேற வைத்தது. அப்பகுதியின் சிங்கள உதவி அரசாங்க அதிபர் அநத இளைஞர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததோடு அவர்களைக் கைது செய்தார். பின்னர் காணி அமைச்சருடன் செய்து கொண்ட உடன் பாட்டின் படி அத்துமீறி குடியேறிய இளைஞர் உட்பட பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.
1969 இல் மாவட்ட சபைகள் பற்றிய பிரேரணைகள்.
த.அ.க உடன் ஐக்கியதேசியக் கட்சி செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மாவட்டசபைகளை உருவாக்கி அதிகாரத்தைப் பரவலாக்குதல் பிரதானமாக இருந்தது. இது தொடர்பான சட்டமூலம் மு. திருச்செல்வம் அவர்களினார் தயாரிக்கப்பட்டு பல மாதங்கள் ஐ.தே கட்சியாலும் தமிழரசுக் கட்சியினாலும் ஆரயப்பட்டது.
இறுதியில் இது தொடர்பான வெள்ளையறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அரச ஆதரவு ஊடகவியலாளர்கள் , அரசாங்க கட்சி உறுப்பினர்கள், பௌத்த அமைச்சைச் சேர்ந்தவர்கள் என்போர் தீவிர எத்ரிப்ப பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சிய டட்லி, மாவட்ட சபை மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவர இயலாது என கூறுகின்றார். மீண்டும் ஒரு தடவை தமிழ் தலைமைகள் ஏமாறுகின்றன.
இந்நிலையிலும் த.அ.க. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை திருமலையில் நிறுவ நடவடிக்கை எடுத்தது. கோணேஸ்வரப் பகுதியைப் புளித பிரதேசமாக்கம் தீர்மானமும் எடுக்கப்படுகின்றது. இலங்கையின் வரலாற்றின் படி இது சிங்களவரினதும் பௌத்தர்களினதும் நாடு என்ற தாம் கருதுவதால் பௌத்த பிக்குகள் இதனை எதிர்க்கின்றனர். டட்லி புனித பிரதேசத்திட்டத்தினை நிராகரிக்கின்றார். த.அ.க. அரசிலிருந்து வெளியேறுகின்றது.
தமிழ்ப் பிரதேசத்தை பௌத்த மயமாக்கும் போக்குகள்.
திருகோணமலையை பௌத்த பிரதேசமாக்க முயற்கி செய்து சேருவாவிலவை அரசு உருவாக்குகின்றது. யுhழ்ப்;பாணத்தில் தாழ்த்தப்பட்ட சிறுபான்மைத் தமிழ் மக்கள் மத்தியில் பௌத்த சிற்களப் பாடசாலைகளை அமைக்கம் முயற்சியில் நான்கு பாடசாலைகள் புத்தூர் அச்சுவெலி,அல்வாய், கரவெட்டி ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்படுகின்றன. த.அ.கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பின் இவை பௌத்த சிஙகளப் பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்படுகின்றன. த.அ.க. யின் எதிர்ப்பினால் அங்கு வேறு வழியில்லாமல் தமிழ் மொழியே போதனா மொழியாக இருந்தது.
1970இல் பொதுத் தேர்தல்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமாசமாஜக்கட்சி,இலங்கை கம்னியுஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணி 116 ஆசனங்களை அதாவது 2 3 பங்கு ஆசனங்களைக் கைப்பற்றுகின்றது. இக்கட்சிகளுக்குள்ளிருந்த முஸ்லிம் அணிகள் கல்வி அமைச்;சினைக் கோரிப் பெற்றக் கொள்கின்றன. பதியுதின் முகம்மது கல்வியமைச்ச்ராக வருகின்றார். தமிழ் மக்களின் போராட்டத்துடன் இணைய விடாமல் முஸ்லிம் அக்களைத் தடுப்பதற்கு எந்த சலுகையையும் தரத் தயாராக அரசாங்கம் இருக்கிறது. தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானப்பீடங்களில் கூடியளவு பிரவேசிப்பது ஒரு பிரச்சனையாக தேசிய அரசியலில் எடுக்கப்படுகின்றது. தமிழ் மாணவர்களின் அனுமதியைக் குறைப்பதற்கான தரப்படுத்தல் முறையை அறிமுகம் செய்யம் ஏற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. இந்த நகர்வுக்கு தமிழ் மாணவர்கள் ஆக்ரோஷமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
1970 நவம்பர் பாடசாலை பகிஷ்கரிப்புடன் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஆரம்பிக்கின்றன. சுமார் பத்தாயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றார்கள். தமிழரசுக் கட்சியின் மிதவாத சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிரான சில கோஷங்களும் ஊர்வலத்தில் எழுப்பப்படுகின்றன. தொடர்ந்து 1970 டிசம்பர் மட்டக்களப்பிலும் மாணவர் பேரவையினால் ஆர்பப்hட்ட ஊர்வலம் நடத்தப்படுகின்றது.
1971 இல் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறை அறிமுகம்
பல்கலைக்கழக விஞ்ஞான பீடங்களில் தமிழ் மொழி மூல மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் மொழிவாரித் தரப்படுத்தல் முறை கொண்டுவரப்படுகின்றது. இதன் படி பல்கலைக்கழக அனுமதிக்கு தமிழ் மாணவர்கள் சிங்கள, முஸ்லிம் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் கூடிய புள்ளிகள் எடுக்கவேண்டிய நிலையேற்படுகின்றது. இதை எதிர்க்கும் முகமாக தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெறுகின்றது.
1972 இல் குடியரசு அரசியல் யாப்பு
ஐக்கிய முன்னணி அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளுமைக்கு கீழே இல்லாத ஒரு புதிய குடியரசு அரசியல் யாப்பைக் கொண்டுவருவதற்கான அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுகின்றது. இச்சபையில் தமிழ் கட்சிகள் பூரண சோசலிச பொருளாதாரத்தையும், சாதி சமய பேதமற்ற சமூக அமைப்பையும் கொண்ட சுயாட்சி பெற்று ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய சமதர்ம சமஷ்டிக் குடியரசு அரசியல் யாப்பு ஒன்றினைத் தயாரித்து சமர்ப்பிக்கின்றன.
தமிழ்மொழி விசேட சட்டமும் யாப்பிற்கான இந்த யோசனைகளில் உட்புகுத்தப்பட்டது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபை இவற்றை ஆலோசனைக்கு எடுக்கவும் தயாரில்லாமலிருந்தது. தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரித்து வெளியேறுகின்றது.
1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பின் பேரினவாதத் தன்மைகளைப் பின்வருமாறு சுருக்கமாகக் கொள்ளலாம்.
தேசிய அரசுப் பேரவையில் மீயுயர் கருவியாக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய அரசு பேரவையில் 157 அங்கத்தவர்கள்pல் 19 பேர் மட்டுமே தமிழர்கள். எனவே தமிழர்களுக்கு எதிரான எச்சட்டத்ததையும் உருவாக்கும் நிறைவேற்றும் நிலையில் அது இருந்தது.
இது விடயத்தில் சோல்பரி அரசியல் திட்ட்தில் செயற்படுத்த முடியாமல் பெயரளவிலாவது இருந்த 29 பிரிவும், அதிகாரச் சமப்படுத்தலுக்;கான கோமறைக்கழகம், நீதிமன்றங்களின் நீதிப்புனராய்வு அதிகாரம் என்பனவும் நீக்கப்பட்டன. சுpங்கள மொழி அரச கரும மொழியாகவும் சட்டவாக்க மொழியாகவும் இருந்தது.
நீதிமன்றங்கள், இணக்க சபைகள், நியாய சபைகள் ஆகிய எல்லாவற்றினதும் மொழி சிங்களமாக்கப்பட்டன.
அரசசேவை நீதிச்சேவை தொடர்பான பொறுப்புகள் அனைத்தும் அவைக்குரிய ஆணைக்குழுவிடமிருந்து அகற்றப்பட்டு ஒரு (சிங்களப் பெரும்பான்மை) அமைச்சரவையில் ஒப்புவிக்கப்பட்டது. பௌத்தமதத்திற்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட்டது.
புதிய அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மக்களினால் ஏற்றக்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்காக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். இந்தக் கொள்கையின் அடிப்படையில் இடைத்தேர்தலுக்கு நிற்கும் படி அரசாங்கத்திடம் அவர் சவால் விட அரசாங்கம் அவசரகாலச்சட்டததினை உபயோகிக்கித்து இடைத்தேர்தலைப் பின்போடுகின்றது. தொடர்ந்து தமிழ் பிரதேசங்களில் கறுப்புக்கொடிபோன்ற போராட்டங்கள் நடைபெறுகின்றன.
1972 இல் தமிழர் கூட்டணியின் தோற்றம்.
அரசியற் கட்சிகள், தொழில்சங்கங்கள் மாணவ இயக்கங்கள் ஆகியவையும் கட்சி சார்பற்ற பெரியோர்களும் பங்கு பற்றிய மாநாட்டில், அனைத்து தமிழ் கட்சிகளும் சேர்ந்த கூட்டணி உருவாக்கப்படுகின்றது. அனைத்துக் கட்சிகளும் கட்சி சாரா ;)தாபனங்களும் இதில் பிரதிநிதித்துவப்படுத்தம் வகையில் நிரந்தரமான நடவடிக்கைக் குழு உருவாக்கப்படுகின்றது. முதலாவது குடியரசு தினப் பகிஷ்கரிப்பு போன்ற சாத்வீகப் போராட்டங்கள் சில முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் மாணவர் பேரவை பஸ் எரிப்பு தேசியக்கொடி எரிப்பு என முதல் முறையாக வன் முறையில் ஈடுபடுகின்றது.1972 ஆம் ஆண்டு உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்த பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு சிவகுமாரனால் வீசப்பட்ட குண்டில் மயிரிழையில் பிரதியமைச்சர் உயிர் தப்புகின்றார். கொழும்பில் திசை வீரசிங்கம் வட்டுக்கொட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசாவைச் சுடுகின்றனர்.ஆயினும் தியாகராசா உயிர் தப்புகின்றார். ஒரு கோயில் மூலஸ்தானத்தில் தமிழ் மாணவர் பேரவை மறைவாக வைத்திருந்த கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியன பொலிசாரினால் கைப்பற்றப்படுகின்றன. இதன் பின்னரான படையினரின் தேடுதலில் மாணவர் பேரவையின் மத்தியகுழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் முன்னணி உறுப்பினர்களும் கைது செய்யப்படுகின்றனர். 1972 இன் இறுதியில் மாணவர் பேரவை சிதைவடைகின்றது.
தமிழர் கூட்டணி அவசர அவசரமாக அரசுக்க ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைஅனுப்பகின்றது. மூன்று மாதகால அவகாசத்திற்குள் இக்கோரிக்கையின் அடிப்படையில் அரசியலமைப்பக்குள் திருத்தங்கள் கொண்டு வராதபட்சத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலையைக் காண சாத்வீக வழியில் போராடுவது என்று அறிவிக்கின்றது.
கூட்டணி சமர்ப்பித்த ஆறு அம்சக் கோரிக்கைகளாவன
1. அரசியல் அமைப்பில் சிங்களமொழிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதே இடம் தமிழ் மொழிக்கும் அளிக்கப்படல்வேண்டும்.
2. இலங்கை மதசார்பற்ற அரசாகப் பிரகடனப்படுத்தப்படுவதன் மூலம் எல்லா மதங்களையும் சமமாகப் பேணி வளர்த்தல் வேண்டும்.
3. இந் நாட்டைத் தம் தாயமாகக் கருதும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பூரண குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டங்கள் அரசியலமைப்பில் இடம் பெறல் வேண்டும்.
4. நீதி மன்றத்தின் மூலம் நிலை நாட்டப்படக்கூடிய அடிப்படை உரிமைகள் அரசியல் அமைப்பின் இடம் பெறல் வேண்டும்.
5. சாதியையும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் அரசசியல் யாப்பின் மூலம் ஒழித்தல் வேண்டும்.
6. அதிகாரம் பரவலாக்கப்பட்டு மக்கள் பங்கு கொள்ளும் ஜனநாயக ஆட்சி அமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
இந்த மகஜர் தமிழர் கூட்டணித் தலைவர் செல்வநாயகத்தினால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசாங்கம் இக்கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
1973 இல் தமிழ் இளைஞர் பேரவை தோற்றம்.
1972 இன் பிற்பகுதியில் தமிழ் மாணவர் பேரவை தலைமறைவு இயக்கமாக மாறவே விடுதலைப் போராட்ட நோக்கத்தோடு தமிழ் இளைஞர் பேரவை வரதராஜப் பெருமாள், பத்மநாப போன்றவர்களினால் உருவாக்கப்படுகின்றது. தமிழர் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்ற கோஷத்தினையும், தமிழரசுக் கட்சி எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் இது முன்வைக்கின்றது. ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் இது முன்னெடுக்கின்றது.
1974 இல் நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு
நான்காவது சர்வதேச தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபோது அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும், மாநாடு வெற்றிகரமாக நடன்து கொண்டிருக்கம் போது 10,000 மக்கள் கூடியிருந்த வீரசிங்கம் மண்டபத்தின் முன்னாள் பொலிஸ் அதிபர் சந்திரசேகர் தலைமையில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மின்சாரக் கம்பி அறுந்து தாக்கியதில் 9 பேர் மரணமானார்கள். இந்த மாநாட்டில் சிவகுமாரன் என்கின்ற தீவிரவாத இளைஞன் வன்னியில் போர்த்துக்கேயரோடு போராடிய அரசன் பண்டாரவன்னியனாக வேடம் பூண்டு அலங்கார ஊர்தியில் வருகின்றார். இவர் நடந்த அசம்பாவிதங்களைக் கண்டு அவற்றை தீர்க்க வன்முறைதான் வழி எனச் சபதம் பூணுகின்றார்.
சிவகுமாரனும்,அவனது சகாக்களும் வங்கிக் கொள்ளை, ஆயத நடவடிக்கைகள் என்று பல நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அரசாங்கம் சிவகுமாரனைப் பிடித்துத் தருபவர்களுக்கு 10,000 சன்மானம் என அறிவிக்கின்றது.
இறுதியில் சிவகுமாரன் கைது செய்யப்படும் வேளை சயனைட் அருந்தித் தற்கொலை செய்கின்றார். இவரது மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
வரலாற்று நிகழ்வுகள் தொடரும் காத்திருங்கள்.