ஐஸ்லாண்டை சேர்ந்த ஐஸ்சேவ் வங்கி ஐந்து பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு ஐஸ்லாண்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வங்கியில் ஏராளமான பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து மக்கள் முதலீடு செய்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்த அரசுகள் உதவி திட்டங்களை செயற்படுத்தியிருந்தன. அந்த திட்டங்களை நடத்தியதற்கான பணத்தை தர வேண்டும் என்று இந்த அரசுகள் கோருகின்றன.