உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரை இறுதி வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டது இந்தியா.
நேற்று நடந்த முக்கியப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி அரை இறுதிக்கு போட்டியிடுவதற்கு இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் தவற விட்டு விட்டது இந்தியா.
மேலும் இந்தத் தோல்வி இந்தியாவுக்கு இந்தத் தொடரில் கிடைத்த 3வது தொடர் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.