கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், அஜீத் வடேகர் ஆகியோர் வலியுறுத்தினார்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன் குவித்து உலக சாதனை படைத்த காரணத்தால் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மராட்டிய மாநில அரசும், சிவசேனாவும் இதே கருத்தை வலியுறுத்தின.
தற்போது அந்தப்பட்டியலில் கங்குலியும் இணைந்துள்ளார். தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.