ஈராக் போர் தொடர்பான விசாரணையில் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் அளித்த சாட்சியம் தொடர்பில் பெரும் சர்ச்சை நிலவும் நிலையில், அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற பிரிட்டிஷ் துருப்புகளை சந்தித்துள்ளார்.

தெற்கு ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினரை சந்தித்த அவர், மிக விரைவில் வீதியோர குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் ரோந்து வாகனங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என கூறினார்.