
கடந்த வருடத்தில் லின்ஸ் என்ற பெண்கள் தொடர்பான அமைப்பு கணக்கெடுப்பை மேற்கொண்டிருந்தது. இதன் போது பெண்களின் அடிமைத்தனத்தையும், தமக்கு நடக்கின்ற துன்பங்களை வெளிக் கொண்டு வருவதில் முற்போக்கான சிந்தனையை வளர்த்துக் கொள்வதில் பெரும் பாலான பெண்கள் ஆர்வம் அற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருகின்ற பெண்களில் திருமணத்தின் பின்பு கணவனால் துன்புறுத்தப்படுகின்ற பெண்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும் இவ்வாறான துன்புறுத்தல்கள் பாலியல், உளவியல் ரீதியாக அதிகரித்துக்காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரம் பத்தில் ஒரு பெண் மட்டுமே தனக்கு நடக்கின்ற துன்பத்தை வெளியில் சொல்லக் கூடிய நிலையில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனாலும் தற்போது உலகளாவிய ரீதியில் அரசியல் நடவடிக்கைகளில் அதிகளவான பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள் எனவும் ஆண்களை விட பெண்களுக்கே பொறுப்புணர்வுடன் செயற்படும் தன்மை நிறைந்து காணப்படுவதாகவும் பெண்கள் தொடர்பான அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.