சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை நீடிக்கும் என அந்நாட்டின் பிரதமர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதன் போது அவர் தெரிவிக்கையில் சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்கிற கொள்கையை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியும். மக்களின் தேவைகள் பூர்த்தியாவதற்கும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் உதவிகரமாக அமையும். நாடாளுமன்றத்தின் விதிகளின் படி இக்கொள்கையில் தேவையான மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்கையினால் பிறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.