About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Mar 5, 2010 / பகுதி: கட்டுரை /

தமிழரின் பிரதேசங்களைக் கபளீகரம் செய்வதில் இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு உதவி அளிப்பு

(இந்தக் கீழ்காணும் கட்டுரை, இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘onslaught of Tamils’’என்ற ஆங்கில கட்டுரையைத் தழுவிய தமிழாக்கம்:)


இலங்கையில் “ஓய்வு பெற்ற இராணுவத்தினரை” வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றுவதற்குக் கொழும்பு போடும் திட்டத்திற்குச் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்ய முன்வருகின்றன என ஈழத்தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன.


2009-ல் இலங்கைக்குக் கடன் உதவி செய்த நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா, தமிழ் மக்களின் பிரதேச வலுவைச் சேர்ப்பதற்கு இலங்கைக்கு உதவி செய்கின்றது. மேற்கு நாடுகள் இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்த நிலையில், அதை ஈடு செய்யும் பொருட்டு, இந்தியா தனது நாட்டிற்கு இலங்கை ஆடைகளை ஏற்றுமதி செய்யலாம் என ஒரு இந்தியத் தூதுவர் கொழும்பில் கூறியுள்ளார்.

(census) உதவ முன்வரும் நிலையில், தமிழ் வட்டாரங்களில் மக்கள் குறைந்தமையால் அவர்களின் பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைக்க வேண்டுமெனத் தென்புலத்தினர் வலியுறுத்துவதாகத் தமிழ் அமைப்புகள் கூறுகின்றனர்.


இருதசாப்தங்களாக யாழ்பாணத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை இராணுவத்தினர், மக்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் வீடுகளைக் கபளீகரம் செய்ததுடன், அவர்களைத் திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் தள்ளியுள்ளனர். சமீபத்தில், வன்னியில் குடியிருப்பதற்குத்தகுதியான கட்டடங்களை இராணுவத்தினர் பிடித்தமையால், தமிழ் அரச ஊழியர்கள்கூடத் தங்கள் வீடுகளைத் திரும்பப் பெறமுடியாது அவஸ்தைப் படுகின்றனர்.


சீனாவின் தூதர் யாங் சுபிங் Yang Xiuping திங்களன்று 50 கோடி ரூபாய் பெறுமதியான கண்ணிவெடி அகற்றும் தளவாடங்களை வடக்கின் “மீள் குடியேற்றத்திற்கு” கொடுத்துள்ளார். கடந்த வருடம், இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியாவின் கூற்றுப்படி, சீனாவிடம் இருந்து முன்கூட்டியே கட்டப்பட்ட இராணுவக் கூடாரங்களை “விடுதலை பெற்ற வடக்கில்” நிறுவ இலங்கை அரசு வாங்கியுள்ளது.


சீனா, இலங்கைக்கு 1200 கோடி டாலர்களைக் கடனாகக் கொடுத்துள்ளது. இலங்கை மொத்தமாகப் பெற்ற எல்லாக் கடன்களின் பாதியிலும் பார்க்க இத்தொகை மேலானதாகும். இலங்கை தற்போது சீனா, இந்தியா, ஈரான், ஜப்பான், மியான்மார் ஆகிய நாடுகளில் கூடுதலாகத் தங்கியிருக்கிறது என அவதானிகள் கருதுகின்றனர்.


சீனா, இலங்கை அரசை ஊக்குவிப்பதானது, இந்திய ஊடகங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உண்மை. ஆனால், அதே நேரத்தில், அந்த ஊடகங்கள், இந்தியா இலங்கைத் தீவில் என்ன செய்கிறது என்பதை, நோக்கத் தவறியது விந்தையாக இருக்கிறது.


இந்தியாவானது, தனது “பொருளாதார, கேந்திர முக்கியத்துவத்துக்காக” தமிழரை அடக்கும் சிங்கள அரசின் போக்கை ஆதரிப்பதன் மூலம் தமிழருக்கெதிரான ஒரு நிலைப்பாட்டடைத் தொடர்ந்து நீடிக்கிறது எனத் தமிழ் மக்கள் நினைக்கின்றார்கள். ஆறு தசாப்பதங்களாக நடக்கும் இந்தியாவின் இந்தப் போக்கு இதனை உறுதிப் படுத்துகின்றது. அதே சமயத்தில், உபகண்டத்தில் வாழும் சில தமிழர்களும் தமது சுயநலத்திற்காக, ஈழத்தமிழர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் முன்னிற்பது நம்பமுடியாத செயலாகும்.


மேற்குலக நாடுகள், தமிழ் மக்களின் சுதந்திரக் கோட்பாடுகளை ஏற்க மறுத்த போதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஓர் அரசியற் தீர்வுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமெனும் அவர்களின் குரல்கள் வலுவடைந்து வருகின்றன. இன்று இலங்கைத் தீவில், மக்களுக்கு நீதி மறுத்து வரும் ஆட்சிபீடத்தின் நடவடிக்கைகளுக்கு, சர்வதேச சமூகம் ஒரு இனஅழிப்பு நடைபெற்ற யுத்தத்தை ஆரம்ப நிலையிலே தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவராத பொறுப்பற்ற நடப்புதான் காரணமெனத் தமிழ் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இன்றைய நிலைமை, இனஅழிப்பு என்றால் என்ன என்று தெரியாதது போல் நடிப்பதன் மூலமும் அங்கு நடப்பது இனஅழிப்பே அல்ல என்று மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமும், இலங்கையில் நடைபெறும் அழிவுப்பாதையை ஒற்றையாட்சியில் திருத்தியமைக்கப்படலாம் எனத் தீர்மானிப்பதன் மூலமும், தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதுமான மேற்குலக நாடுகளின் நடைமுறையில் தங்கியிருக்கிறது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......