About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 4, 2010 / பகுதி: கவிதை /

பெண்ணே நீயும் பெண்ணா?

 

 

பாவை என்றனர்
பங்கயம் என்றனர்
பஞ்சின் மெல்லடிப் பனிமலரென்றனர்.
கோவை என்றனர்
குவகை யென்றனர்
குடைந்தெடுத்த நற்சித்திரமென்றனர்.
சேவை செய்யவென தண்டைகளேற்றனர்
சிற்றிடைக்கும் சிறப்புகள் பாடினர்
சேலெடுத்து விழிகளில் சேர்த்தவர் என்றனர்.

 

அன்பான அன்னையாகி
பண்பான மனைவியாகி
இன்பமான வார்த்தைகளும் தந்து
ஈகை என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுத்து
ஏற்புடன் வாழ நாழும் பொழுதும்
உழைத்திடும் இனம்
இப் பெண்ணினம்.

 

பசி தீர்க்கும் மருந்தென்றே
பாவையுள்ளாள் இங்கு
மாற்றத்தை விரும்பாத மானிடர்
மடந்தை அவளை
பின் தள்ளியே பிதற்றுகிறார்.
என் சொல்லி இவள் நிலை மாற்றுவோம்.

 

மாற்றங்கள் தந்தான்
எம் தங்கத் தலைவன்
அடுக்களையில் மட்டுமல்ல பெண்கள்
ஆயதங்களோடும் அவள் தான் இன்று
இணையில்;லாத் தலைவன் தந்த
முதல் விடுதலை அது.

 

அரசியலிலும் அவள் தான்
ஆகாய விமானத்திலும் அவள் தான்
ஆழ் கடலிலும் ஆரவாரமின்றி அவள் தான்
மக்கட் பேறுக்கு மட்டுமல்ல பெண்
மக்கள் போருக்கும் பெண்தான்
துணி துவைக்க மட்டுமல்ல பெண்
படையணி நடத்தவும் அவள்தான்
பகையும் முடிப்பவளும் இவள்தான்

 

உதாரணம் தந்தவர் ஈழத்தில் பலர்
புலத்திலே சிலர்
 

துணைவனின்றி வாழாமல்
உயிர் துறந்த காலமெல்லாம்
மாறி;ப்போனது எம் தலைவன் காலத்தில்

 

வீரம் கொண்ட பெண்ணினம்
எம் பெண்ணினம்
நிலத்திலே பல
நிகரற்ற சாதனை செய்து
வரலாற்றில் பதிந்து விட்ட
மறவர் இனம் எம் பெண்ணினம்

 

புலத்திலே சில புறம் பேசும்
புல்லுருவிகளும் உண்டு
வந்த பாதை மறந்து
வந்த நோக்கம் மறந்து
தொலைக்காட்சித் தொடரில்
தொலைந்த போன இனமும் உண்டு

 

தங்கத் தமிழ் ஈழத்தை விட்டு
தந்தை தாய்
உறவுகளைத் தவிக்கவிட்டு
இங்கு வந்து
தங்கம் வாங்கிக் குவிக்கும்
தங்க மகள்களும் உண்டு

 

சரிகைப் பட்டிலே சரிந்து போகும்
சாபப் பட்ட இனமும் உண்டு
எந் நேரமும் விழாக்கள் செய்து
விளங்காமல் போன இனமும் உண்டு

 

இன்னும் அடிமைத்தனம்
இன்னும் மூடத்தனம்
ஆணுக்கு அடிமைபோல்
சமமில்லா வாழ்க்கை
சீதனம் எனும் தனம்
தீர்மானிக்கும் உறவு முறை
எங்கு வாழ்ந்தாலும்
எங்கு பறந்தாலும்
மாறாத மடமைத்தனம்

 

விழித்துக் கொள் பெண் இனமே!
நீ விழித்தால் நாடு விழிக்கும்!
நீ மயங்கினால் நாடு பழிக்கும்!

 

உண்ண உணவின்றி
உடுக்க உடையின்றி
உயிருக்க உத்தரவாதமின்றி
உறவுகளின் உதவியில்
ஓடி வந்த இனம் நாம்
கடவுச் சீட்டே இல்லாமல்
கடல் கடந்து வந்தோம்
காசு சேர்ந்ததும்
அனைத்தையும் மறந்தே போனோம்.

 

சீட்டென்றும் சேலையென்றும்
பாட்டென்றும் படமென்றும்
நகை நட்டென்றும்
நலிந்தே போனோம்

 

அனைத்தையும் மாற்றுவோம்
நிலத்தைப் போலவே
புலத்திலும் புரட்சிகள் செய்வோம்
சிக்கனமாய் நாம் வாழ்ந்து
செல்வம் சேர்த்திடுவோம் - எங்கள் தேசம் மலர
எம்மால் முடிந்தவரை உதவி செய்வோம்.
உறவுகளைக் காக்க கரங்கள் பல சேர்ப்போம்.

 

ஆக்கம்; ரத்தினா.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass