About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 4, 2010 / பகுதி: மருத்துவம் /

உணவுக்கும் குணத்திற்கும் உண்டு தொடர்பு.

எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

 

ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன.

 

உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.

 

காரம் உப்பு, புளிப்பு என அழுத்தமான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு, மாமிசங்கள், எண்ணையில் பொரித்த உணவுகளை விரும்பி உண்பவர்கள் எப்போதும் பதட்டம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு தப்பான முடிவுகளை எடுத்தவிட்டு பின்பு வருத்தப்பட்டு விட்டு, மீண்டும் அதே தவறைச் செய்வார்கள்.

 

அசுத்தமான உணவு, புளித்துப்போனது, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள், பழைய உணவு, டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது, கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.

இவ்வாறான குறிப்பு ஆயுள்வேதம் தொடர்பான பொத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass