ஈராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அங்கு பக்குபா நகரில் தற்கொலைக் குண்டுதாரிகள் நடத்தியுள்ள தொடர் தாக்குதல்களில் முப்பதுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
குண்டுதாரிகளில் ஒருவர் அரசாங்க வீடமமைப்பு அலுவலகங்களுக்கு வெளியில் காரில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
தேர்தலை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.