About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 27, 2010 / பகுதி: உலக வலம் /

சில்லி நாட்டில் நிலநடுக்கம்.

 

தென் அமெரிக்க நாடான சில்லியைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் காரணமான உருவான ஆழிப்பேரலைகள் ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து வரை பசுபிக் பெருங்கடலி்ல் உள்ள அனைத்து நாடுகளையும் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தென் அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 3.34 மணிக்கு சிலியன் கடலோர நகரமான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் ஏற்பட்டது.

 

ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் உருவான ஆழிப்பேரலைகள் (சுனாமி) சிலி, பெரு நாடுகளின் கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி, பசிபிக் கடற்பகுதியில் உள்ள ஹவாய், ஜப்பான், ரஷ்யா, ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து வரையுள்ள அனைத்து நாடுகளையும் அடுத்த 15 மணி நேரத்திற்குள் தாக்கும் என்று பசுபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணித் துளிகளில் சிலி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளன. 9 அடி உயரமுள்ள ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலோர நகர்பகுதியான மாலே கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதென கூறப்படுகிறது. அங்கிருந்தும், 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானிலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

 

இதுவரை 82பேர் உயிரிழந்தாக மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சில்லி நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......