About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Feb 27, 2010 / பகுதி: வரலாறு /

தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... ஆக்கம்: யோதிலிங்கம். பாகம் 6

தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்டு அதன் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் பல மாதக் கணக்காய் தடுத்து வைக்கப்படுகின்றனர். அதன் பின்னர் விடுதலையாக்கப்பட்ட தலைவர்கள் தொடர்ந்தும் தங்கள் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுப்பதாக முடிவு செய்கின்றனர்.

1959 இல் பண்டாரநாயக்காவின் மரணம்.
 
பிரதம மந்திரி பண்டாரநாயக்கா தனது தேர்தல் வாக்குறுதிகளின் தீவிர சிங்களவாதக் கொள்கைகளை அமுல் படுத்தாத காரணத்தினால் பௌத்த பிக்க ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். நாட்டில் அமைதியின்மையும் பொதுத் தேர்தலுக்கான அறிகுறியும் ஏற்படுகின்றன.
        

இதே வேளை தமிழரசுக் கட்சி யாழ். நகரிலுள்ள தேநீர்க் கடைகளில் சாதி அடிப்படையில்பாரபட்சம் காட்டி வித்தியாசமான கோப்பைகளில் தேநீர் வழங்கும் நடவடிக்கையைக் கண்டித்து தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கின்றது. இத்துடன் உயர் கல்விக்கு வசதியற்ற மலையகப் பிள்ளைகளை புலமைப் பரிசில் கொடுத்து இலவசமாகப் படிப்பதற்கு யாழ்ப்பாண பிரபல கல்லூரிகளில் சேர்த்து மலையகத்தின் அபிவிருத்தியைப் பற்றிய வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எண்ணக் கருவினைத் தெரிவித்தது.


1960ல் பொதுத் தேர்தல்கள்.
 
இந்த வருடம் இலங்கை இரண்டு போதுத் தேர்தல்களை சந்தித்தது. முதல் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதைத் தவிர கட்சியின் ஆதரவைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்;றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சியைவிட நான்கு தொகுதிகளே அதிகமாகப் பெற்றிருந்ததினால் ஏனைய கட்சிகளின் ஆதரவை நாடியது. தமிழரசுக் கட்சி தனது ஆதரவைக் கொடுப்பதற்கு நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது.


1. பண்டா செல்வா ஒப்பந்தம் செயற்படுத்தப்படவேண்டும்.

 

2. அதற்கிடையில் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.

 

3. இலங்கைப் பிரஐhவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடு திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கம் குடியுரிமை வழங்குவதன் மூலம் “நாடற்ற தமிழர்” என்ற நிலை நாளடைவில் மாறவேண்டும்.

 

4. குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை, பாராளுமன்றத்தின் நியமனப் பிரதிநிதிகள் ஆறு பேரில் நான்கு பேர் மலையக மக்களின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும்.

 

ஐக்கிய தேசியக் கட்சி இதை நிராகரிக்க சுதந்திரக் கட்சி ஆதரிக்க முன்வருகின்றது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கடசியின் சிம்மாசனப் பிரசங்கத்திலேயே தமிழரசுக் கட்சி அதற்கு எதிராக வாக்களித்த அந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்கின்றது.
        

ஆட்சி நிலையற்றதால் யூலை மாதம் இன்னமொரு பொதுத் தேர்தல் நடக்கின்றது. ஸ்ரீலங்காh சுதந்திரக் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கின்றது. ஆனால் தமிழரசுக் கட்சியுடன் முன்புசெய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுகின்றது. நாட முழுவதும் நீதி மன்றங்களில் சிங்கள மொழியையையே வழங்கு மொழியாக்கும் சட்டத்தைக் கொண்டு வருகின்றது. தனியார் பாடசாலைகளையெல்லாம் சுவீகரித்து அரச பாடசாலைகளாக்குவதன் மூலம் கல்வியையும் சிங்கள மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றது.

 

திரும்பவும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறியதால் 1961 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வடக்கு கிழக்கிலும் ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுப்பதென்று தமிழரசுக் கட்சி தீர்மானிக்கின்றது.
    

அனைத்து இலங்கை இஸ்லாமிய அமைப்பு இவ்வாண்டு தோற்றம் பெறுகின்றது.

 

முஸ்லீம் மக்கள் தங்கள் இனதஇதின் பாதுகாப்பு கருதி இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட இன அடையாளத்தை நிலை நாட்டுகின்றனர். தமிழ் தங்களுடைய இயற்கையான மொழி அல்லவென்றும் அது பிற இனத்திலிருந்து நடைமுறை கருதி கடன் பெற்றமொழியே என்றும் வரiவிலக்கணம் தருகின்றனர். இந்த வகையில் அரபிப் பாஷையைத் தங்கள் இயல் மொழியாகக் பொள்ளகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அறுபதுகளில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார பண்பாட்டு விரித்தியைக் காண்கின்றனர். இதன் அடிப்படையில் தாம் ஒரு தனித்துவமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பிக்கின்றனர்.


1961 இல் சத்தியாக்கிரகம்.
 

வடக்கு கிழக்க ஆகிய இரண்டு மாகாணங்களிலும் அரசாங்க நிர்வாகம், ஸ்தம்பிதம் என்று கூறப்படும் அளவுக்கு அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்கின்றனர்.பொலிசார் தாக்கதலை மேற்கொண்டு சத்தியாக்கிரகத்தை முறியடிக்கப் பார்க்கின்றனர். இத் தாக்குதலில் மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் படுகாயமுற்று இறக்கின்றார். இவ்வாறு 50 நாட்கள் சத்தியாக்கிரகம் தொடர்ந்து நடைபெற்றதால் யாழ். மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதம் அடைகின்றது. இப்போராட்டம் மட்டக்களப்பு,மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் தொடர்கின்றது.
   

அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்னாண்டோ சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பான பேச்சவார்த்தைகளில் பங்கு பற்றினாலும் மொழியுரிமை தொடர்பாக மிகக் குறைந்த கோரிக்கையில் கூட உடன் பாடு ஏற்படாததால் போராட்டத்தை தொடருவது என தீர்மானிக்கப்படுகின்றது.


1961 இல் தமிழ் அரசின் தபால் சேவை ஆரம்பிக்கப்படுதல்
 
போராட்டத்தின் தீவிரத்திற்கு முகம் கொடுக்க முடியாது அரசாங்கம் பங்கீட்டு உணவு (இலவச அரிசி) வழங்குவதை நிறுத்தி வடக்கு கிழக்கு மக்களைப் பணிய வைக்க முற்படுகின்றது. இந் நிலையில் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்தடன் தமிழ் அரசியல் தலைவர்கள் அரச தபால் சேவை சட்டத்தை மீறித் தனியாக தமிழரசு தபால் சேவையொன்றை ஆரம்பிக்கின்றனர்.
  

ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைக்க 10,000 பேர் வரிசையில் நின்று தபால் தலைகளைப் பெற்றனர். தமிழரசு சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப் படுகின்றார்.

தமிழரசுத் தபால் பெட்டிகள் பல இடங்களில் வைக்கப்படுகின்றன. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி 12 மணிக்கு அவசரகாலச்சட்டமும்48 மணி நேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப் படுகின்றன.

கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர்.வடக்க கிழக்க இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப் படுகின்றது. திஐமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் உட்படதலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் பனா கொட இராணுவ முகாமில் தடுத்தவைக்கப்படுகின்றனர். தமிழரசுக் கட்சி சுதந்திரன் பத்திரிகைஎன்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகம் சீல் வைக்கப்படுகின்றது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு கொண்டுவரப்படுகின்றது.
  

சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாக வடக்கிற்குச் சென்று சத்தியாக்கிரகத்தினை உற்சாகப் படுத்துகின்றார்.இதனால் இ.தொ.கா பிரதிநிதிகளும் கைது செய்யப்படுகின்றனர். தோட்டத் தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்கின்றது; எனினும் தெற்கு அஞ்காமல் ஏப்ரல் மாதம் 25ம் திகதி 5 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். தோட்டப் பகுதிக்கு இராணுவம் அனுப்பப்படுகின்றது.

6 மாதங்களின் பின் கைது செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். தமிழரசுக் கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் செல்கின்றன. அதுவரை போராட்டங்கள் தொடருகின்றன.

பொலிசாரின் தாக்குதலினால் சில தொண்டர்களும் மேலுமொரு பாராளுமன்ற உறுப்பினரான வி. ஏ. கந்தையாவும் உயிர் இழக்கின்றனர்.

1963 ல் “எல்லாம் தமிழ் இயக்கம்” உருவாதல்.
 
சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும் தமிழ் மக்களை அரசுடனாக தம் கருமங்களைத் தமிழில் ஆற்றல் தூண்டுவதற்குமான எல்லாம் தமிழ் இயக்கத்தை தமிழரசுக் கட்சி உருவாக்குகின்றது. இதன் படி தமிழ் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள் மற்றம் அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள், தந்திகள் முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டப்படுகின்றார்கள். இதற்கு எதிர்ப்பாக 1964ம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. சிங்கள அரசாங்கம் ஊழியர்களையும் அதே வேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தை திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வட கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கின்றது.
          

தமிழரசுக் கட்சி அரசாங்கத்தின் இந்தப் போக்கை பகீஸ்கரிப்பது என்றும் இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்டத்தைப் பற்றிய அச்சத்தினால் சிங்கள ஊழியர்களும் ஆசிரியர்களும் வட கிழக்கிற்கு செல்ல மறுக்கின்றனர். ஜனவரி மாதம் முதலாம் திகதி அன்று மாபெரும் கண்டன ஊர்வலங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு மாவட்ட கச்சேரிகளுக்கும் முன்னால் சிங்களப் பிரதிகள் எரிக்கப்படுகின்றன.

 

1964 ல் பாத யாத்திரை
  
சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலச்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் ..பாதயாத்திரையை தமிழரசுக் கட்சி நடத்தகின்றது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறைத் தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகி வடக்கு கிழக்கு எங்கும் செல்கின்றது.
         

1964ல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்.
  
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரை திரும்ப இந்தியாவுக்கு அனுப்பும் ஒப்பந்தத்தை சிறிமாவும் இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் மேற்கொள்கின்றனர். இது பற்றி பாராளுமன்ற நியமன உறுப்பினர் தொண்டமானுடன் கலந்தாலோசிக்கவில்லை. தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது.
    
1965 ல் டட்லி செல்வா ஒப்பந்தம்.
  
மாவட்ட சபைகள் கட்டமைப்ப வழங்கப் பட்;டது. இதில் காணி அதிகாரங்கள் இச் சபைகளுக்க வழங்கப்பட்டு குடியேற்றங்கள் நடைபெறும் போது முதலில் அம் மாவட்டங்களிலுள்ள காணியில்லா மக்களுக்கு முன்னரிமை வழங்கி பின்பே மிகுதியிருந்தால் வெளி மாவட்டங்களிலிருந்து குடியேற்றவாசிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துடன் கட்சி தனது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவந்து அரசாங்கத்துடன் சேருகின்றது.
  
தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்ததினால் பழைய தமிழ் அரச ஊழியர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி சம்பள உயர்வு,பதவி உயர்வு வழங்கப் படுகின்றது.புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி எட்டாந்தர மாக்கப்படுகின்றது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் ஒன்பதாந்தரச் சிங்களச் சோதனையை எட்டாம்தரம் எனக் கூறி தமிழ் அதிகாரிகளுக்கு நடத்தினார்கள். இந்த நடவடிக்கை கொடுக்கப்பட்ட சலுகைகளை முறியடித்தது.
 
1966 ல் தமிழ் மொழி உபயோக சட்ட விதிகள் மசோதா

 
1958 இல் பண்டாரநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட தமிழ் மொழி உபயோக சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான முன்னேற்ற சட்டம்  மூலம் தமிழரசுக் கட்சியின் நிர்ப்பந்தத்தின் பேரில் பாராளுமன்றிற்கு கொண்டுவரப்படுகின்றது.
 
இதன் படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும்,நாடு முழவதிலும் தமிழ்ப் பேசும் மக்கள் தமிழ் மொழியில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்படுகின்றது. இதனை சிறிலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்களக் கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்க்கின்றன. இச் சட்டவிதிகள் மூலச் சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன என அவை வலியுறுத்தின.
 
இது தொடர்பாக அரச தொழில் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, எதிர் கட்சிகள் விகாரமகாதேவி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தின.

ஊர்வலம் கட்டுங்கடங்காமல் சென்றதால்,பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததின் விளைவாக இரத்தினசாரதேரோ என்ற பௌத்த பிக்கு சுடப்பட்டு மரணமடைந்தார். இருப்பினும் அரசாங்கம் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் இது நடைமுறையில் பெரிதாக செயற்படவில்லை.


வரலாற்று நிகழ்வுகள் தொடரும் காத்திருங்கள்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass