
வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை –சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்
புலிகளின் கல்லறை வெளியிலில்லை.
காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதும் இல்லை
வாழும் தலை முறை சாகும் கரும்புலி
வாழ்வை அறிவதும் இல்லை
வாழ்வை அறிவதும் இல்லை – அவர்
வாசம் புரிவதும் இல்லை
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் - ஒரு
தொட்டில் வளர்த்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லிப் புறப்பட்டுப் போவார்
சொல்லிப் புறப்பட்டுப் போவார் - எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்
நொடியில் ஒரு பெரு வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் - எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும் - அவர்
மூச்சும் பெரும் புயலாகும்.