லண்டன் விமான நிலையத்தில் உடலை நிர்வாணமாக படம் பிடித்துக் காட்டும் அதி நவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருவி ஆடைகளை ஊடுருவிச் சென்று உடலின் அங்க அவயங்களை துல்லியமாக பிரதிபலிக்கும் சக்தி கொண்டதாகும். எடைபார்க்கும் இயந்திரம் போன்ற அமைப்பில் இருக்கும் இந்தக் கருவியின் முன்பு பயணிகள் ஏறி நின்றால் 45விநாடிக்கள் அந்தப் பயணியின் நிர்வாணத் தோற்றம் அப்பிடியே பின்புறம் உள்ள திரையில் பதிவாகும்.
பெருகி வரும் பயங்கரவாத தாக்குதல்களை தவிர்ப்பதற்காக விமானப் பயணிகளிடம் கடுமையான சோதனைகள் நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க பிரான்சின் பாரீஸ் நகரத்திலுள்ள விமான நிலையத்திலும் இவ்வாறான கருவிகள் பொருத்தப்படவுள்ளதாகவும் பெப்ரவரி மாதக் கடைசிப் பகுதியில் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.