பேரினவாத அரசியல், அரச கட்டமைப்பினூடு முன்னெடுக்கப் பட்டதால் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் முன்வைத்த தேசிய ஒன்றிணைப்பு அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டு தமிழ் இனத்தைப் பிரதானப் படுத்திய அரசியல் முன்னெடுக்கிறது. இதனால் 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இன அரசியலை முன்னெடுத்த தலைவர்கள் வெற்றியடைகின்றனர். ஜீ.ஜீ. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசிக்கின்றார்.
1936ம் ஆண்டு தனிச் சிங்கள மந்திரி சபையும் அமைக்கப் படுகிறது .இதைக்;கண்ட தமிழ் மக்;கள் நடைமுறையில் இருக்கும் அதிகாரக் கட்டமைப்பில் நம்பிக்கை இழக்கின்றனர்.
1939 ல் இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றம்
திடீரென அரசாங்கம் இந்திய வம்சாவளித் தொழிலாளர் தலைவர்களை வேலையிலிருந்து நீக்கியது.
இதைக்கேள்விப்பட்ட மகாத்மா காந்தி இலங்கையின் ஆட்சியாளர்களுடன் பேச்சவார்த்தைகள் நடாத்துவதற்கு ஜவகர்லால் நேருவை அனுப்பபுகிறார். நேரு பேச்சவார்த்தை நடாத்தியும் கூட ஆட்சியாளர்கள் வேலை நீக்கத்தினை வாபஸ்வாங்க மறுக்கின்றனர்.
இதனால் நேரு இந்திய வம்சாவளியினருக்கென தனியான அமைப்பினை உருவாக்குமாறு ஆலோசனை வழங்குகிறார். நேருவின் ஆலோசனையின் பேரில் இலங்கை இந்தியர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
தொண்டமான் 1944ல் இலங்கை இந்திய காங்கிரசின் தலைவர் ஆகிறார். 1950 களில் இந்த அமைப்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1944 அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தோற்றம்
இனச் சமூகங்களின் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை வலியுறுத்தம் வகையில் 50:50 கோரிக்கையின முன் வைத்து ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் (அ. இ. த. கா) உருவாகின்றது.
1947 சோல்பரி அரசியல் திட்டம்
சோல்பரி பிரபுவுக்கு ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்; அ. இ.த.கா. 50:50 கோரிக்கை அடங்கிய திட்டத்தினை முன்வைத்தது. கண்டியச் சிங்களவர் சமஸ்டிக் கோரிக்கையினை முன்வைத்தனர். கரையோரச்சிங்களவர் ஒற்றையாட்சி அடிப்படையிலான உள்ளுர் சுயாட்சியுடன் கூடிய மந்திரி சபை மசோதாவை முன்வைத்தனர்.
கடைசியில் சோல்பரி அரசியல் சீர்திருத்தம் இனங்களுக்க மத்தியிலான அதிகாரப் பங்கீடு இல்லாத ஒற்றையாட்சி அரசியல் யாப்பைக் கொண்டுவருகின்து. ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடாக 29 வது பிரிவு இந்த யாப்பில் உள்ளடக்கப்படுகின்றது. இந்தப் பிரிவுச் சட்டத்தின்படி சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிராக ஏதேனும் சட்டம் கொண்டு வரப்படுமாயின் அதனைத் தடுக்கும் அதிகாரம் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குக் கொடுக்கப்பட்டது.
அ.இ.தொ.கா கடுமையான யாப்பினை எதிர்க்கின்றது. பெரும்பான்மைவாத ஜனநாயகத்தின் அடிப்படையில் உருவாகும் அரசு தமிழ் மக்க்ளின் நலன்களைப் பேண உதவமாட்டாது என வலியுறுத்துகின்றது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்க லண்டன் பயணமாகின்றார். டீ.எஸ் சேனாநாயக்கா சில திமிழர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று யாப்பினை அரசாங்க சபையில் நிறைவேற்றுகின்றார். 1947 தேர்தல்களில் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் சோல்பரி சீர்திருத்தத்திற்கு எதிராக தமிழர் வாக்களிக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் ஒற்றையாட்சியில் சமூகங்களின் ஜனநாயகம் பேணப்படவில்லையாயின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய இணைப்பாட்சியை தாம் கோரப்போவதாக அ.இ.த.கா அங்கத்தவர்களில் ஒருவரான எஸ்.ஜ.வி. செல்வநாயகம் கூறுகின்றார்.
1948ல் இலங்கை சுதந்திரமடைதல்.
தமிழ் மக்களுக்கான சமூக ஜனநாயகம் பேணப்படாததினால் சுதந்திரக்கோரிக்கையினை அ.இ.த.கா நிராகரித்தது. டி.எஸ் சேனாநாயக்க சில தமிழரை அமைச்சர்களாக்கி அவர்கள் ஆதரவுடன் சுதந்திரக் கோரிக்கையினை வென்றெடுத்தார்.
சுதந்திர தினத்தில் ஏற்றப்பட்ட சிங்கக் கொடியையும் அது பௌத்த சிங்கள மக்களது சின்னம் மட்டுமே என்ற காரணத்தால்
அ.இ.த.கா நிராகரிக்கின்றது. செல்வநாயகம் சங்கிலியனின் நந்திக்கொடியினைத் தனது வாகனத்தில் ஏற்றுகின்றார்.
இந்தத் தேசியக் கொடி விவகாரம் 1950 கள் முழுவதும் தமிழ்மக்களின் போராட்டங்கள் பலவற்றக்கான காரணமாகின்றது.
சிங்களத்தலைவர்களோ,இந்தியாவின் தேசியக் கொடியில் ஒரு பௌத்த அரசனின் சின்மான அசோக சக்கரம் மட்டும் பொறிக்கப படலாம் என்றால், ஏன் இலங்கைக் கொடியில் சிங்கம் இருக்கக் கூடாது என்று வாதாடுகின்றனர்.
1948 யூலையில் எதிர்க்கட்சியில் இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் கைத்தொழில் மீன் பிடிதஅமைச்ச்ராகி அரசாங்கத்தில் சேருகின்றார். இவரது காலத்தில்தான் பரந்தன் பெதழிற்சாலை,காங்கேசன்துறைசீமெந்துத் தொழிற்சாலை, காகித ஆலை ஆகியன தாபிக்கப் படுகின்றன. அதற்குப் பின்பு இன்று வரை வடகிழக்கில் எந்தத் தொழிற்துறையும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
1948ல் டிசம்பர் 10 ல் பிரஜாவுரிமைச்சட்டம்.
1948க்கு முன்னர் இலங்கை இந்தியா போன்ற சகல நாடுகளிலும் வசித்த மக்கள் பிரித்தானியப் பிரஜைகளாவர். எனவே சுதந்திரம் பெற்றபோது இலங்கை அரசாங்கம் தனது பிரஜாவுரிமைக்கான வரைவிலக்கணத்தை கொடுக்கவேண்டியிருந்தது. மலையகத் தோட்டத் தொழிலானர்கள் தமிழ் நாட்டுடனான தங்கள் தொடர்புகளைப் பேணி வந்ததாலும் அங்கு அடிக்கடி சென்று வந்ததாலும் இந்தியா அவர்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் ,இந்திய வம்காவளியினரின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் வகையில் பிரஜாவுரிமைச் சட்டத்தினை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் கொண்டுவருகின்றது. இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரி அரசியல் வேரூன்றியதும், அவ்வாறான கொள்கையுடைய இந்தியத்தமிழ்த் தலைவர்கள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இச்சட்டம் கொண்டு வருவதற்கான வேறு காரணங்களாகும்.
ஜீ.ஜீ. பொன்ன்ம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாகமும் மட்டுமே இதற்கு எதிர்த்து வாக்கனிக்கின்றனர்;. சுயேட்சை தமிழ் உறுப்பினர்கள் சிலர் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர்.
பின்பு இச்சட்டத்திற்கு நிசர்த்தியாக இந்தியா- பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 1949ம் ஆண்டு ஓரளவிற்கு பிரஜாவுரிமை வழங்கும் ஏற்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி இலங்கைப் பிரஜாவுரிமை கோரும் இந்திய வம்சாவளியினர் திருமணமாகியவர்கள் எனில் 7 வருடங்கள் இலங்கையில் தொடர்ச்சியாக வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும். திருமணமாகாதவர்கள் எனில் 10 வருடங்கள் இந் நாட்டில் தொடர்ச்சியாக வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும். இதன் கீழ் போடப்பட்ட நடைமுறை ஏற்பாடுகள் சாதாரணமாக எவரும் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத அளவிற்கு கடுமையாக இருந்தது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ. தொ. கா) இதற்கான எதிர்ப்பு போராட்டத்தினை நடத்தி பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என மக்களுக்கு கூறுகின்றது.
பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலம் வாக்களிப்பிற்கு விடப்பட்டபோது ஜீ.ஜீ. பொன்னம்பலம் உட்பட அ.இ.த.கா ஆதரவாக வாக்களிக்க செல்வநாயகம் உட்பட மூவர் எதிர்த்து வாக்களித்தனர். சட்டம் அங்கீகரிக்கப் படுகின்றது. இதன் பின்னர் தேர்தல் திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
இவையெல்லாவற்றின் ஊடாகவும் மலையக மக்களின் வாக்குரிமை முழுமையாகப் பறிக்கப்படுகின்றது.
வரலாற்று நிகழ்வுகள் தொடரும் காத்திருங்கள்.