சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டது எண்டேவர் விண்கலம்

விண்வெளியில் உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஐந்து விஞ்ஞானிகளுடன் அமெரிக்காவின் எண்டேவர் விண்கலம் புளோரிடா மாநிலத்திருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

 

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 4.14 மணிக்கு எண்டேவர் விண்கலம் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்து புறப்பட்டதாகவும், திட்டமிட்ட நேரத்தை விட 24 மணி நேரம் தாமதமாக எண்டேவர் புறப்பட்டுள்ளது. 13 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றுள்ள இந்த விண்கலம் இருளில் செலுத்தப்படுவது இதுவே கடைசி முறை.

 

இதே வேளை நாசா மற்றும் சர்வதேச நாடுகளின் சார்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

 

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்த ஆராய்ச்சி மையம் முழுவதுமாக கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.