
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடனனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடனனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழ்த் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.
நான் தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளேன். அவ்வாறு இணக்கம் காணப்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். எனினும் எனது நிலைப்பாட்டை அடுத்து வரும் வாரத்தில் வெளியிடவுள்ளேன்.