
சிறீலங்காவின் யாப்பை திருத்தி அமைக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆணையை எதிர்பார்க்கின்றோம் அதாவது முன்றில் இரண்டு பெரும் பான்மையை எதிர் பார்க்கின்றோம் என சிறீலங்காவின் அமைச்சர் சுதந்திரக் கட்சி கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மக்களின் அவாக்களை பூர்த்தி செய்யக் கூடியவாறு யாப்பை திருத்தி அமைக்க கூடிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமது கூட்டணி வடகிழக்கிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதே நேரம் யாப்பு மாற்றம் பற்றி தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் அவர்களின் எந்த கோரிக்கைக்கும் கீழ் பணிய மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்கு அரசு செய்யும் பொய் பரப்புரையே தவிர வேறு ஒன்றும் இல்லை எனத் தெரிவித்துள்ள கல்வியாளர்க ஏற்கனவே சர்வ கட்சி குழுவால் ஆரம்பிக்கப்பட்ட தீர்வு திட்ட யோசனை வரைபு தற்போது தூக்கி எறியப்ப்டடது போன்று இதுவும் தேர்தலின் பின்னர் காணாமல் போய்விடும் எனத் தெரிவித்துள்ளனர்.