ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகியன தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானம்

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகியன தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஒரு ஆசனத்தைக் கூட வடக்கு கிழக்கில் கைப்பற்ற முடியாத நிலை ஏற்படாலம் என்று இந்த குழுக்கள் கருதுகின்றன.

 

இந்த முடிவுகளை ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இரு கட்சிகளும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

எனினும் இவர்கள் தனித்து போட்டியிட்டால் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதில்; சிக்கல் நிலை தோன்றும் என்பதால் அவர்களின் முடிவுகளை ஏற்க அரசாங்க தரப்பு மறுப்பு  தெரிவித்துள்ளது.


இதனை அடுத்து அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக என்ற குழப்ப நிலையில் இரு கட்சிகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.