அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சரத் பொன்சோவின் ஆதரவாளர்களால் அரசாங்க தரப்பு பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற புலனாய்வு தகவல்களை அடுத்தே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினால் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் சந்தேகத்திற்கிடமான இராணுவ அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.