நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் ஏப்பிரல் 8ம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் இம்முறை அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் அரசாங்கம் வெற்றிபெறும் என்னும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.