அமெரிக்க அதிபரின் கலைக்குழுவில் இந்தியர்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கலைக் குழு உறுப்பினராக வெளிநாடுவாழ் இந்தியர் ஜும்பா லஹிரி உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதற்கான அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில் லஹிரி தவிர, சக் குளோஸ், பிரெட் கோல்ட்ரிங், ஷீலா ஜான்சன், பமீலா ஜாய்னர் மற்றும் கென் சாலமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இதுகுறித்து ஒபாமா கூறுகையில், உலகப் புகழ் பெற்ற இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன். இவர்களின் ஒத்துழைப்பால் ஆர்ட்ஸ் அன்ட் ஹியூமேனிட்டி குழுவின் பணிகள் சிறக்கும் என்றார்.