பாகிஸ்தானில் இரட்டைக் குண்டுவெடிப்பு! 22 பேர் பலி!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முதல் சம்பவத்தில்,வெடிமருந்துகள் நிரம்பியிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஷியா இன மக்களை ஒரு மத ஊர்வலத்துக்கு ஏற்றிச் சென்ற பஸ் மீது மோதியதில், 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு மணிநேரத்துக்கு பின்னர், இந்த முதல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே மற்றுமொரு மோட்டார் சைக்கிள் வெடித்ததில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இந்தக் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருப்பதாக இஸ்லாமாபாத் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.