சிகரட் பிரியர்களே! கவனமாக இருங்கள்.

 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா புறநகரான பெகாசியில் வசிப்பவர் ஆன்டே சுசான்டோ. வயது 31. சிகரெட் புகைத்தபடி ஈருருளியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென சிகரெட் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

 

அதனால் ஆன்டேவின் வாயில் படுகாயம் ஏற்பட்டு 6 பற்கள் உடைந்தன. வாய்க்குள் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆன்டேவுக்கு வாயில் 51 தையல்கள் போடப்பட்டன.

 

சிகரெட் வெடித்து படுகாயம் ஏற்படுத்தியதால் அதைத் தயாரித்த நோஜோரனோ புகையிலை நிறுவனம் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர ஆன்டேவின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.